Song Lyrics

ஆட்சியாளரே ஆளுகை செய்யும்
இதய ஆட்சியாளரே என் இன்ப இயேசுவே

1. இதய சிம்மாசனம் ஏங்கி தவிக்குதே
இரவும் பகலும் எந்நேரமும்
நேசரை தேடிடுதே!

2. உம்மை நினைக்கும் பொழுதெல்லாம்
இந்த உலகை மறக்கிறேன்
எப்போதும் உம் நினைவுதானே
எப்போதும் உம் ஏக்கம்தானே!

3. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்காது
வெள்ளங்களும் அதை தணிக்காது
ஆஸ்தியும் பிரிக்காது

ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்?
ஏன் நீ எனக்குள் தியங்குகிறாய்?
கலங்காதே நீ திகையாதே
கர்த்தர் கைவிடமாட்டார்

1. வாழ்வில் ஏமாற்றம் தோல்விகளோ
வாழ்ந்தவர் பிரிந்து சென்றனரோ
வாழ்வளிக்கும் இயேசு வருகின்றார்
வாழ்வை வளமாக்குவார்

2. கண்ணீர் கவலை துயரங்களோ
கடலின் புயல்போல் கொந்தளிப்போ
அதட்டிடுவார் புயல் அமர்த்திடுவார்
அமர்ந்த கரை சேர்ப்பார்

அன்பே! அன்பே! அன்பே!
இதயத்தை ஆட்கொண்ட அன்பே!
இயேசு என்னும் பாச அன்பே!
நதிபோல பாய்ந்திடும் அன்பே! அன்பே!

1. இதயத்தைக் கவர்ந்த அன்பே
இதமாக அழைத்த அன்பே
அபிஷேகம் ஊற்றி மார்போடணைத்து
அடைக்கலம் தந்த பேரன்பே! – அன்பே

2. பிசாசின் பிடிதனில் கதறி
நோயின் தவிப்பில் வாடி
நொறுங்குண்ட இதயம் உமைநோக்கி கதற
புதுவாழ்வு தந்த பேரன்பே! – அன்பே

3. ஆதரவற்றோரைத் தேடி
இவ்வுலகத்தில் அலைந்த அன்பே
கண்ணீர் துடைத்து காயங்கள் ஆற்றி
மறுவாழ்வு தந்த பேரன்பே! – அன்பே

4. உறவுகள் உடைந்து வாடி
உலகையும் வெறுத்து ஒடி
கல்வாரி நிழல்தான் கரைசேர்க்கும் கலம்தான்
என்று கதறுவோரைக் காத்த பேரன்பே! – அன்பே

அபிஷேக தேவனே! அபிஷேக தேவனே!
அபிஷேகம் என்னில் தாருமே!
வல்லமையின் வரங்கள் என் வாழ்வினில் செழிக்க
வல்லமையால் வந்திடுமே!

1. ஞானத்தின் ஆவியினால் நிரப்பியே நடத்திடுமே!
வேதத்தின் அதிசயங்கள் நான் அறிந்திட வந்திடுமே!

2. கிருபையின் ஆவியினால் நிரப்பியே நடத்திடுமே!
கீழான நினைவுகளை அகற்றிட வந்திடுமே!

3. தேற்றிடும் ஆவியினால் நிரப்பியே நடத்திடுமே!
உள்ளத்தின் காயங்களை புதுஎண்ணெயால் ஆற்றிடுமே!

4. பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கிடுமே!
நிறைவான தூய்மை நோக்கி என்னை நடத்திட செய்திடுமே!

5. மேல்மாடி அறைதனிலே சீடர்கள் நடுவினிலே
அக்கினியால் இறங்கினீரே ஆண்டவர் நிரப்பிடுமே!

அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
அப்பா பிதாவே நிரப்பும் நிரப்பும் நிரப்பும் – 2

1. வறண்ட நிலம் போல வாடுகிறேன்!
வயல்வெளி போல் என்னை வளமாக்கும்!

2. ஆவியின் வல்லமை வேண்டுமையா!
அயல்மொழி வரத்தை தாருமையா!

3. பேய்களை பெலத்தால் துரத்தணுமே!
புது எண்ணெய் அபிஷேகம் தந்திடுமே!

4. அனுதினம் ஆவியால் நிரம்பணுமே!
ஆண்டவர் இயேசுவில் வாழணுமே!

5. நுகங்களை ஆவியால் முறிக்கணுமே!
ஆவியால் விடுதலை கிடைக்கணுமே!

6. தேற்றிடும் ஆவியால் நிரப்பிடுமே!
தேசத்தில் வன்முறை ஒழித்திடுமே!

7. தேவனின் சமூகமதை நாடிட செய்திடுமே!
தீங்கெனை தொடராமல் காத்து நடத்திடுமே!

அக்கினி நாவு அமரச் செய்யும்
ஆவியின் வல்லமையே (2)
அல்லேலூயா -8

1. பலிபீடத்தின் அக்கினி
பாவங்களை சுட்டெரிக்கும் -2
பரிசுத்தாவியின் அக்கினி
பரிசுத்தமாய் காத்திடும் – அக்கினி நாவு

2. பெந்தெகோஸ்தே நாளினிலே
பெருமழையாய் இறங்கினீரே -2
பலத்த சாட்சியாய் நிலைநிறுத்த
பயந்த சீஷரை நிரப்பினீரே – அக்கினி நாவு

3. யோர்தான் ஆற்றில் நேசர்மேல்
இறங்கி வந்த தேவ புறாவே -2
கனிகளால் என்னை நிரப்பிடவே
கர்த்தரின் ஆவியே வந்திடுமே – அக்கினி நாவு

அன்பின் சொரூபியே
ஆறுதல் தெய்வமே
ஆண்டவா இயேசுவே வாழ்க உன் நாமமே
ஆராதனை ஆராதனை

1. உன் மாளிகையில் வாசலிலே விழித்திருப்பேன் நான்
உன் கத வருகை மண்டியிட்டு செவி கொடுப்பேன் நான்

2. கல்வாரியின் கனிமொழியே தேனின் மதுரமே
வெள்ளை போல வாசனை எனது இயக்கமே

3. தேவனை உன் கிருபை என்றும் அருமையானது
தூக்கி சுமந்து பாதுகாத்து நடத்தி செல்லுது

4. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி
பணிந்து குனிந்து தாழ் பணிந்து நமஸ்கரிக்கிறோம்

5.விண்ணகத்தின் வாசனையே மண்ணோர் நறுமணமே
இதமாய் வீசும் தென்றல் காற்றே இதய கீதமே

அன்பின் நேசரே ஆட்கொண்டீரே
உம் நாமத்தைப் பாடி துதிப்பேன்

அல்லேலூயா

1 உம் நாமம் என்றும் பரிசுத்தமே
உம் ராஜ்ஜியமும் வந்திடட்டும்
பரலோகத்தில் உம் சித்தம் செய்வதுபோல
பூமியிலும் உம் சித்தம் செய்யட்டும் – அன்பின்

2. உம் நாமம் என்றும் அதிசயமே
செங்கடலில் வழி அமைத்தீர்
யோர்தானை பிரித்துவிட்டீர்
இஸ்ரவேலை அதில் நடத்தி சென்றீர் – அன்பின்

3. ஊற்றுண்ட பரிமளமே
வாக்குமாறா தேவன் நீரே
வானம் பூமியும் மாறினாலும்
உம் வார்த்தை என்றும் மாறிடாதே – அன்பின்

அன்பு இயேசுவின் அன்பு
அன்பு தூயரின் அன்பு

1. கெத்சமனே கண்ணீரும் அன்பல்லவா கசையடி இரத்தமும் அன்பல்லவா
முள்முடி ஏற்றதும் அன்பல்லவா
கல்வாரி சிலுவையும் அன்பல்லவா!

2. பரலோகம் விட்டதும் அன்பல்லவா
பூமியில் நின்றதும் அன்பல்லவா
சாபங்கள் ஏற்றதும் அன்பல்லவா
ஜீவனைக் கொடுத்ததும் அன்பல்லவா!

3. மீண்டும் வருவதும் அன்பல்லவா
மீட்பை தந்ததும் அன்பல்லவா
ஆவியின் நிறைவும் அன்பல்லவா
ஆசீர் அளித்ததும் அன்பல்லவா

அதிகாலமே தேடுகிறேன்
ஆண்டவா என் இயேசுவே

1 வறண்டதும் விடாய்த்ததும்
தண்ணீரற்ற நிலம் போல
என் ஆத்துமா வாஞ்சிக்குதே
மாம்சமும் ஏங்குதையா

2. காலையில் கண் விழிக்கையில்
உம் சாயலால் திருப்தியாவேன்
இரவிலும் என் இதயமோ
உமக்காக விழித்துள்ளது

3. காலையில் மரியாளும்
கண்ணீரோடு உம்மை தேடினாளே
ஏன் அழுதாய் மரியாளே என்றீர் மகிழ்ச்சியுடன் உம்மை தழுவிக் கொண்டாள்

4. காலையில் உம் சமூகத்தில்
ஆயத்தமாய் காத்திருப்பேன்
உம் பிரசன்னத்தால் மகிழ்ச்சியாவேன் செட்டை நிழலில் தங்கிடுவேன்

5. காலையில் உம் இரக்கங்களோ புதியவைகள் எ நேசரே
காலையில் உம் கிருபைதனைமகிழ்ச்சியுடன் பாடிடுவேன்

பயப்படாதே திகையாதே கலங்காதே
பெலப்படுத்தும் கர்த்தர் உன்னை காத்திடுவார்

1. செங்கடல் சீறிப் பாய்ந்தாலும் கலங்காதே
ஜெயக்கொடி பிடித்து கிறிஸ்து உன்முன் செல்கின்றார் – 2

2. யோர்தான் போன்ற சோதனை வேதனை வந்தாலும்
வழிநடத்தும் வல்ல தேவன் தப்புவிப்பார் – 2

3. எரிகோ கோட்டை எதிர்த்து உன் முன் நின்றாலும்
எக்காளம் ஊத இடிந்து உன் முன் விழுந்திடும் – 2

4. கெர்ச்சிக்கும் சிங்கம்போல சாத்தான் எதிர்த்தாலும்
கரங்களை பழக்கும் கர்த்தர் உன்முன் செல்கின்றார் – 2

5. ஏழுமடங்கு நெருப்பில் உன்னை எறிந்தாலும்
தேவகுமாரன் நெருப்பின் நடுவில் தோன்றிடுவார்
சேதம் எதுவும் அணுகாமல் உன்னை காத்திடுவார்

தேவ கிருபை தாங்கி நடத்தும்
கலங்காதே மகனே(ள) – 2
ஒருபோதும் உன்னை கைவிடாது
ஒருநாளும் அது விலகிடாது

                  அது இயேசுவின் கிருபை
                  என் நேசரின் கிருபை
                  நான் கல்வாரி மலையில்
                 அன்று கண்டிட்ட கிருபை

1. மரித்தோரை எழும்பச் செய்யும்
மங்காத கிருபையது
மானிடர் பாவங்களை
மன்னிக்கும் கிருபயது

2. சிங்கத்தின் வாய்தனையும்
சீறி வரும் செங்கடலையும்
எதிர்நீக்கும் யோர்தானையும்
அடக்கிடும் கிருபையிது

3. காலையில் பொழிந்திடுதே
பெலன் தரும் புது கிருபை
நாளெல்லாம் உழைத்திடவே
உம் கிருபை போதுமையா

4. குருடரை பார்க்கச் செய்யும்
செவிடரை கேட்க செய்யும்
முடவரை நடக்க செய்யும்
உன் கிருபை போதுமையா

தேவனே! என் அலைச்சல்களை அறிந்திருக்கிறீர்
என் கண்ணீர் மறைவிடமாய் போவதில்லையே – 2

1. உம் காட்டுப்புறாவின் ஆத்துமாவின் கதறுதலைக் கேளும்
என் கன்மலையே துருகமே என்னை கைவிடாதிரும்

2. என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது
மான்கள் நீரோடை வாஞ்சிப்பதுபோல் வாஞ்சித்துக் கதறிடுதே!

3. சிறுமையும் எளிமையுமான என்னில் நன்மையில்லையே
ஆவியின் பெலத்தால் நன்மைகள் ஈந்து ஆசீர்வதித்திடுமே!

எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
உண்டாக்கும் நற்செய்தி. . . இயேசு பிறந்துள்ளார்
Happy – 4 Christmas (4)

1. பரம சேனையின் திரள் கூட்டம்
பரமனை பாடி மகிழ்ந்தது
மந்தை மேய்ப்பரின் திரள் கூட்டம்
மகிழ்ச்சியால் துள்ளி குதித்திட்டது

2. உன்னதங்களிலே தேவனுக்கு
என்றென்றும் மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
மனுஷர்மேல் பிரியமும் உண்டாகட்டும்

3. பாவம் போக்கும் பரமனவர்
பாரினில் வந்து உதித்துள்ளார்
இதயத்தின் இருளை நீக்கியவர்
ஏழைக்கோலம் எடுத்துதித்தார்

4. ஆத்தும பசியை போக்கிடவே
அபத்தின் வீட்டில் பிறந்தனரே
பேய்களின் கொட்டம் அடங்கிடவே
பெத்லகேமில் பிறந்திட்டாரே

எழுப்புதல் எழுப்புதல் எழுப்புதல்
என் தேசத்தின் எல்லை எங்கும் எழுப்புதல்
நடனமாடி ஸ்தோத்தரிப்போம்
பாட்டுப்பாடி ஆர்ப்பரிப்போம் – எழுப்புதல்

1. கூடி கூடி ஜெபிக்கும் கூட்டம் எழும்பிவிட்டது
கொக்கரிக்கும் சாத்தான் கூட்டம் ஒடிவிட்டது
பாவம் போக்கும் இயேசு இரத்தம் பாய்ந்து வருகுது
பரலோக தேசத்திற்கு ஆள்சேர்க்குது

2. வல்லமையாய் வாலிபர்கள் எழும்பி வருகிறார்
வாழ்வை மாற்றும் ஆவியிலே நிரம்பி நிற்கிறார்
அந்தகார அஸ்திபாரம் ஆட்டம் கண்டது
கன்மலையில் அஸ்திபாரம் உறுதியாகுது

3. கேளிக்கை களியாட்டுகள் ஓடி ஒளியுது
குற்றத்திற்காய் கதறும் சத்தம் எங்கும் கேட்குது
ஆலயங்கள் ஆவியிலே நிரம்பி மகிழுது
ஆண்டவரின் வருகைக்காக காத்து நிற்குது

எழுப்புதலின் புதிய ஆண்டு தொடங்கிவிட்டது
செழுமையான நாட்கள் இன்று மலர்ந்துவிட்டது
வெற்றி வேந்தன் முன்னே வீரர் நாமும் பின்னே
கரம்பிடித்த கர்த்தரை நாம் தொடர்ந்து செல்லுவோம்

அல்லேலூயா (6)

1. அதிசயங்கள் காணப் போகும் ஆண்டு இதுதான்
சுகவாழ்வு துளிர்க்கப் போகும் வருஷம் இதுதான்
துக்ககாலம் முடிந்து போகும் நாளும் இதுதான்
தூய தேவன் ஆசீர்தரும் நேரம் இதுதான்

2. தண்ணீரைக் கடக்கும்போது தேவன் இருப்பார்
சோதனைகள் வரும்போது தப்புவிப்பார்
கர்த்தர் வெளிச்சம் உன்மேலே உதித்துவிட்டது
காரிருளும் உன்னைக்கண்டு அஞ்சி ஓடுது

3. மக்கள் வெள்ளம் மந்தையைப் போல் பெருகப்போகுது
மன்னர் இயேசு நாமத்தையே புகழப் போகுது
தேவதூதர் எக்காளம் காதில் கேட்குது
தேவ ஜனம் கர்த்தரோடு செல்லப் போகுது

என் இதயம் ஏங்கி தவிக்குதே
என் தேவனை நாடி தேடுதே
எப்போது வருவீரையா
உம் இன்ப முகம் காண்பேனையா

1. அருமை இரட்சகா உம் அன்பு இதயத்தை
குத்தி கிழித்தேனே என் பாவங்களாலே
கெட்ட குமாரன்போல் ஓடிவருகின்றேனே
என் தந்தை இதயமே என்னை அரவணைக்குதே!

2. குற்ற உணர்வில் என் இதயம் கலங்குதே
நொறுக்கப்பட்டதே அது உடைக்கப்பட்டதே
மனந்திரும்பி மரியாள்போய் ஓடிவருகிறோம்

3. பெருமை உணர்வினால் எதிர்த்து நின்றேனே
கீழ்படியாமல் நான் விலகிப்போனேளே
அன்பு காட்டியே சிலுவை மரத்தில் தொங்கியே
உம் இரத்தத்தினாலே அன்பை நிரூபித்தீர்

என் இருதயத்தை ஆராய்ந்து அறிகிறீர்
என் உள்மனதை சோதித்து அறிகிறீர்

1. உம் ஆவிக்கு மறைவாக எங்கே நான் போய் தங்குவேன்-2
உம் பிரசன்னத்தை விட்டுவிலகி எங்கே நான் ஓடிடுவேன்-2

2. மனிதனை நம்பிக் கொண்டு கர்த்தரை விடமாட்டேன்-2
மாம்சத்தை புயபலமாய் என்மனதிலும் நினைக்கமாட்டேன்-2

3. செல்வத்தை பெலனாக ஒருபோதும் நினைக்கமாட்டேன்-2
தேவரீர் என் பெலனும் பலத்த கோட்டையுமாம் – 2

4. அமர்ந்த தண்ணீரண்டையில் என் ஆத்துமாவை தேற்றுகிறீர் -2
புல்லுள்ள இடங்களையே என்புகலிடமாய் தருகின்றீர் – 2

5. அதிகார ஆணவத்தால் அகந்தையாய் நடக்கமாட்டேன்
ஆண்டவர் திருகரத்தில் அடங்கி நடந்திடுவேன்

என் பிரியமே! என் ராஜாவே!
என் நேசரே! என் இயேசுவே!
உமக்கே ஆராதனை! உமக்கே ஆராதனை! – 4

1. உம்மைப் பிரிந்து எங்கே செல்வேன்
வாழ்வு தரும் வார்த்தை உம்மில்தானே – (2) உமக்கே

2. ஆழத்திலிருந்து அழுதேன் ஐயா
கைதூக்கி களிக்கச் செய்தீரையா -(2) உமக்கே

3. வழி தெரியாமல் திகைத்து நின்றேன்!
ஒளி ஸ்தம்பமாய் எந்தன் முன்னே சென்றீர்! – (2) உமக்கே

4. அபிஷேகம் தந்து அணைத்தீரைய்யா!
ஆவியில் மகிழச் செய்தீரையா – (2) உமக்கே

5. உம் வசனம் தந்து பசி தீர்த்தீரே!
உபதேசம் தந்து உணர்த்தினீரே! – (2) உமக்கே

6. விண்ணகம் எதிர் நோக்கி வாழச் செய்தீர்!
விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஈந்தீர்! – (2) உமக்கே

7. தந்தையே! இயேசுவே! தூயாவியே!
திரித்துவ தெய்வமே பணிகின்றேன்! – (2) உமக்கே

என் புறாவே என் புறாவே
கன்மலையின் வெடிப்புகளில்
சிகரங்களில் மறைவிடங்களில்
தங்குகின்ற என் புறாவே
ஏங்குகின்ற என் புறாவே

1. உன் கண்கள் ஒன்றினால் கவர்ந்து கொண்டாய்
உன் கண்ணீரின் ஜெபத்தால் இழுத்துக் கொண்டாய்
உன் நேசம் எவ்வளவு இன்பமானது
திராட்சை ரசத்திலும் மதுரமானது

2. சமாதான சுவிசேஷம் அறிவித்திடும்
உன் பாதங்கள் மலைமேல் அழகானது
உத்தம புறாவே நேசிக்கிறேன்
கல்வாரி நிழலால் மறைக்கின்றேன்

3. அலங்கரிக்கப்பட்ட மணவாளியே
சுத்திகரிக்கப்பட்ட வாசனையே
வெண்வஸ்திரமும் ஜீவகிரீடமும் சூடி
என் மணவறையில் பிரவேசிப்பாய்

என் உள்ளம் உம்மை நோக்கி
ஏங்குதையா தேவ அன்பினால்
நேசத்தையும் பாசத்தையும்
என்னிலே நீர் பெருகச் செய்யும்

1. கிருபையிலே மேகம் நீர்
சிறியவனை நோக்கிடுமே
வரங்களையே வேண்டி நின்றேன்
வல்லமையைத் தாருமையா!

2. கருணையிலே வள்ளல் நீர்
காருண்யத்தில் பெரியவர் நீர்
கடைக்கண் நோக்க ஏங்குகிறேன்
கருணை தெய்வமே கண்பாரும்!

3. பெலனில்லையே போராட
பாரினில் வேறு துணையில்லையே
பெலன் தருவேன் என்று சொன்னவரே
பாடுகிறேன் பெலன் தாரும்!

என் வாழ்க்கையில் நடப்பதெல்லாம்
நன்மைக்காக என நான் அறிவேன் – 2

1. தானியேலும் சிங்க கெபியினிலே
வீழ்ந்திட்டதும் அவன் நன்மைக்காக
விசுவாசத்தில் நீ உறுதிப்பட்டாலே
விளங்கிடுவாய் வெற்றி வீரனாக

2. செய்திடாத பாவத்திற்காய்
அடைபட்டான் யோசேப்பு சிறைச்சாலையில்
பகைத்தோரெல்லாம் நடுங்கும்படி
உயர்த்திட்டார் யோசேப்பை அதிபதியாய்

3. உன் வாழ்க்கையில் நீ உயர்ந்திடவே
பாடுகளும் மகனே உனக்கவசியமே
காலம் வரும் கர்த்தர் இயேசு
உயர்த்திடுவார் தம் வல்ல கரத்தால்

என் இயேசு ராஜா உம்மோடு வாழ
என் இதயம் ஏங்குதைய்யா
பூமியில் நீரன்றி வேறொரு விருப்பம்
எனக்கில்லை இயேசைய்யா

1. தாயும் தந்தையும் மறந்திடலாம்
தகப்பனே நீரோ மறப்பதில்லை
உண்மை நண்பனும் மாறிடலாம்
உம் அன்பு ஒருபோதும் மாறாதைய்யா

2. அலைகடல் எதிர்த்து சீறினாலும்
அஞ்சாமல் அலைகளை கடந்திடுவேன்
இரட்சிப்பில் கரங்களை இணைத்திட்டவர்
என்றென்றும் என்முன்னே நடத்திடுவார்

3. மாயையாம் இந்த உலகத்திலே
மனதை என்றும் செலுத்த மாட்டேன்
மன்னித்து என்னை ஏற்றுக் கொண்டீர்
மன்னவா உம்மில் நிலைத்திருப்பேன்

4. வருவேன் என்று உரைத்துச் சென்றீர்
வருகைக்காய் நானும் காத்திருப்பேன்
கோடான கோடி தூதரோடு
மணவாளனாய் வந்து அழைத்துச் செல்லும்

என் கன்மலையும் மீட்பருமாம் கர்த்தாவே
என் வாயின் வார்த்தைகளும்
இருதயத்தின் தியானமும்
உம் சமூகத்தில் பிரீதியாய் இருப்பதாக

1. சொற்களின் மிகுதியிலே பாவம் உண்டே
என் வாய்க்கு நீர் கர்த்தாவே காவல் வையுமே
என் உதடுகளின் வாசலை காத்துக் கொள்ளும்
பாதகங்கள் அணுகாமல் மீட்டுக் கொள்ளும்

2. பால் மறந்த குழந்தைபோல அமர்ந்திருப்பேன்
பாதம் ஒன்று என் வாழ்வில் போதுமென்பேன்
உம்மைத் தியானிக்கும் தியானம் என்னில் இனிதாகும்
இரவெல்லாம் உம்குரல் கேட்டு மகிழ்ந்திருப்பேன்

3. அக்கிரம சிந்தை என்னில் அகலச் செய்யும்
ஆண்டவரே ஜெபத்திற்கு பதில் தாரும்
நீதிமானின் நாவு சுத்தவெள்ளி என்றீர்
ஞானம் விளங்க வாய்திறக்க கிருபை தாரும்

4. தூற்றித்திரியும் வார்த்தை என்னில் தூரப்படுத்தும்
தூய சொற்கள் நாவிலிருந்து உதிரச் செய்யும்
கோள் சொல்லும் கொள்கை என்னில் மறையச் செய்யும்
குற்றமதை மூடி சிநேகம் நாடச் செய்யும்.

கலங்காதே! என் மகனே!
திகையாதே! என் மகளே!

1. பெரும்காற்று வீசினாலும்
பேரலை எழும்பிட்டாலும்
கதறி நீ மூழ்கும்போது
கரம் நீட்டிக் காத்திடுவார்

     தீயின் சூளையும் பற்றி எரியவே
     தேவ மனிதர்களை தூக்கி எறியவே
     காக்கும் தேவனும் நடுவில் தோன்றவே
     காத்தாரே கர்த்தர் காத்தாரே கர்த்தர்!

2. இயேசுவின் நாமத்தினால்
துன்பங்கள் துயரங்களோ
பவுல் சீலா நோக்கியே பார்
தொழுமரத்தில் கட்டுண்டார்

     தேவதுதியுடன் காத்திருக்கவே
     தேவதூதன் அவர் நடுவில் தோன்றவே
     சிறையின் கதவுகள் அகலத் திறக்கவே
     காத்தாரே கர்த்தர் காத்தாரே கர்த்தர்!

கல்வாரி காட்சியைப் பார்
கதறிடும் இயேசுவைப் பார்
கைகால்கள் ஆணிகளால் கட்டுண்டார் உனக்காக

1. பரலோகில் நடந்த கால்கள்
பாதகர் துளைத்து விட்டார்
அழகில்லை அந்தஸ்தில்லை
அந்தோ தொங்குகிறார்

2.யோவானும் சாய்ந்த மார்பு
ஈட்டியால் துளைபட்டதே
எஞ்சிய இரத்தச் சொட்டும்
தண்ணீரும் வெளிவந்ததே!

3. வெண்மையும் சிகப்புமான
என் இயேசு ராஜன் இவர்
தலையிலே முள்முடியாம்
தாகத்தால் கதறுகிறார்

கன்மலையே! மறைவிடமே!
உம்மை வாஞ்சிக்கிறேன்
உன்னதரே சர்வ வல்லவரே
உம் நிழலுக்காய் ஏங்குகிறேன்

1. விடியும் வேளை எதிர்நோக்கி
காத்திருக்கும் சாமக்காரனைப் போல்
கண்ணீரின் பாதையில் உம்மை நோக்கி
கதறிடும் அடிமையைக் கண்பாருமே

2. புலம்பலை ஆனந்தக் களிப்பாக
மாற்றிடும் எங்கள் அன்புதேவா
யாரிடம் நாங்கள் சென்றிடுவோம்
இந்த ஏழையின் கண்ணீர் துடைத்திடுமே!

3. பகைப்போர் எல்லாம் என்னை நோக்கி
உன் தேவன் எங்கே என்கிறார்கள்
கண்ணீரே எந்தன் உணவாக
உட்கொள்ளும் சிறியோனைக் கண்பாருமே!

4. வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல்
நித்திரை இல்லாமல் புலம்புகிறேன்
நாள்தோறும் சத்துருக்கள் நிந்திக்கிறார்கள்
என்மேல் மூர்க்க வெறி கொண்டவர்கள் சபிக்கிறார்கள்

கதறுகின்றேன் நாதா கண்ணீர் சிந்துகின்றேன் தேவா
ஆற்றுவார் யாருமில்லை
என்னை தேற்றுவார் ஒருவருமில்லை

1. உதவிக்காக ஓய்வில்லாமல் கரம் நீட்டினேன்
உதவுவார் ஒருவரையும் கண்களில் காணேன்

2. என் அக்கிரமங்கள் தலைக்கு மேலாய் பெருகிற்றந்தோ
தாங்க முடியாத பாரமான சுமையானதே

3. பெலனற்று நொறுக்கப்பட்டு ஒடுங்கிப் போனேன்
இருதயத்தின் கொந்தளிப்பால் கதறுகின்றேன்

4. என் மதிகேட்டால் புண்கள் அழுகி நாற்றமெடுத்ததே
வேதனையால் துக்கத்தோடு திரிகின்றேனே

5. நோயின் கொடுமை அனுதினமும் வாட்டுகின்றதே
சுகம் தேடி உம் பாதம் ஓடி வந்தேனே

6. என் ஏக்கமெல்லாம் ஆண்டவரே உமக்குத் தெரியுமே
என் அங்கலாய்ப்பு உமக்கு என்றும் மறைவில்லையே

7. கால் தளர்ந்து கண் கலங்கி சோர்ந்து நின்றேனே கல்வாரி காட்சி எந்தன் கண்ணில் தெரிந்ததே

8. கரம் நீட்டி உதவிடுவேன் என்றுரைத்தீரே
சிலுவை நாதர் உம் மடியில் அடைக்கலமானேன்

9. ஆற்றித் தேற்ற இயேசு உண்டு
அன்பு காட்ட ஆண்டவர் உண்டு

மென்மையான என் நாயகா
மேன்மையான வெண்புறாவே
யோர்தானில் நேசர்மேல் இறங்கினீரே
இன்று என்மேல் இறங்கிடுமே!

1. கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே
கண்ணீர் துடைக்கும் காருண்யரே
பெலவீனத்தில் என் பெலனே
கலக்கத்தில் எங்கள் வெண்மேகமே!

2. உதவிடும் உன்னத கன்மலையே!
வாழ்வில் முன்செல்லும் வழிகாட்டியே
இருளில் எனக்கு வெளிச்சமானீர்
இயேசுவே என்றும் ஸ்தோத்திரமே!

3. என்மேல் பறக்கும் நேசக் கொடியே
வற்றாமல் பாய்ந்துவரும் ஜீவநதியே
மார்பில் சாய்ந்திட்டேன் மன்னவனே
மயங்கினேன் உந்தன் வசனத்திலே!

நீ என்னால் மறக்கப்படுவதில்லை
என் அன்பு பிரிய செல்ல மகனே(ள) – 2

1. தாய் உன்னை மறந்தாளோ
தந்தை உன்னை பிரிந்தாரோ – 2
நான் உன்னை மறப்பதில்லை
என் அன்பு பிரிய செல்ல மகனே(ள) – 2

2. பரலோகம் விட்டிறங்கினேன்
உன் பரிசுத்த நேசத்திற்காய் – 2
அனாதை போல் அலைந்தேன்
உன் அன்பிற்காய் ஏங்கிநின்றேன் -2

3. மலைகள் விலகினாலும்
குன்றுகள் அகன்றிட்டாலும் – 2
மாறாத என் கிருபை
மறையாது என் மகனே(ள) – 2

ஓசன்னா பாடுவோம் இயேசுவை போற்றுவோம்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

1. ஒருவராய் அதிசயம் செய்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளது!
வானங்களை ஞானமாய் உண்டாக்கினாரே
அவர் கிருபை என்றுமுள்ளது!

2. எகிப்தியரின் முதற்பேரை சங்கரித்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளது!
உன் சத்துருக்களை சிதறடிப்பார்
தலையை எண்ணெயால் அபிஷேகிப்பார்
அவர் கிருபை என்றுமுள்ளது!

3. வனாந்திரத்தில் ஜனத்தை நடத்தினாரே
அவர் கிருபை என்றுமுள்ளது!
உன்னை அவரே நடத்திடுவார்
குறைவில்லாமல் காத்திடுவார்
அவர் கிருபை என்றுமுள்ளது!

4. நம் தாழ்வில் நம்மை நினைத்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளது!
அக்கிரமங்கள் மன்னித்தார்
நோய்கள் சுகமாக்கினார்
அவர் கிருபை என்றுமுள்ளது!

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே – 2

1. பரிசுத்தம் உள்ளவர் சத்தியம் உள்ளவர்
தாவீதின் திறவுகோலை தம் கரத்தில் கொண்டவர்

2. துதிக்குப் பாத்திரர் துதிகளில் வாழ்கிறார்
துதிப்போர் உயர்ந்திட துணையாய் நிற்கிறார்

3. தூதர்கள் போற்றிடும் தூய தேவனாம்
ஒருவரும் சேர்ந்திடா ஒளியினில் வாழ்கிறார்

4. விண்ணவர் மன்னவர் முழங்கால் முடங்கிடும்
விண்ணக இராஜனாம் இயேசுவே ஆண்டவர்

5. இம்மட்டும் காத்தவர் இனிமேலும் காப்பவர்
உன்முன் செல்பவர் உலகிலும் பெரியவர்

6. சாத்தானை மிதித்தவர் சாபத்தை முறித்தவர்
சிலுவையில் மரித்தவர் ஜெயமாய் உயிர்த்தவர்

7. மேகங்கள் மீதினில் மகிமையாய் வந்திடுவீர்
நீதியாய் தீர்ப்பிடும் நீதியின் சூரியனே

8. கிருபை நிறைந்தவர் சத்தியம் காப்பவர்
கிருபையின் நாயகா வாழ்க உம் நாமமே

பிரசன்னத்தால் நிரப்பிடும்
புண்ணியரே என் இயேசுவே!

1. தெவிட்டாத தேன் அமுதே
தெளிதேனிலும் மதுரமே – என் இயேசுவே

2. கைவிடாத கன்மலையே
கண்மணிபோல் காப்பவரே – என் நேசரே

3. தண்ணீர் நிறைந்த நதியோரமாய்
தங்கும் புறா கண்கள் உமக்கு – கண்கள் உமக்கு

4. இடதுகை என் தலையின் கீழே
வலது கையால் தழுவிக் கொண்டார் – இன்ப நேசர்

5. நேசரின் மேல் சார்ந்து கொண்டு
உலகை நான் வென்றிடுவேன் – வென்றிடுவேன்

6. சாரோனில் மலர்ந்த ரோஜாவே
பள்ளத்தாக்கில் பூத்த லில்லிமலரே – என் இயேசுவே

புறாவைப்போல கண்கள் இருந்தால்
புலம்பி நான் கதறிடுவேன்
புண்ணியர் இயேசுவை அறியா
பாரத ஜனத்துக்காய் கதறிடுவேன்

1. எருசலேமே! எருசலேமே!
கோழி தன் குஞ்சுகளை அணைப்பது போல்
அணைத்திட மனதாய் இருந்தேனே
என்று இயேசு கண்ணீர் வடித்தாரே – புறாவைப்

2. என் தலை தண்ணீரும் என் கண் கண்ணீர் ஊற்றுமாய்
மாறினால் எவ்வளவு நலமானது
சிறைப்பட்ட சீயோனுக்காய் கதறிடுவேன்
அழிந்திடும் ஆன்மாவிற்காய் கண்ணீர் வடிப்பேன் – புறாவைப்

3. இமயம் முதல் குமரிவரை
இயேசுவின் நாமத்தை அறிக்கையிடு
திறப்பின் வாசலில் நின்றுவிடு
தேசத்தின் ஜனத்திற்காய் கதறி அழு – புறாவைப்

ராஜாதி ராஜா வருகின்றார்
தேவாதி தேவன் வருகின்றார்
ஆயத்தப்படு ஆயத்தப்படு
சந்திக்க ஆயத்தப்படு – நீயும் – 2

1. அவனவன் கிரியைக்கு தக்க பலனோடு – 2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் -2

2. பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தம் ஆகட்டும்
அநியாயம் செய்பவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் – 2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் – 2

3. தீவெட்டி அணையாமல் அதைக் காப்பவன் புத்திமான்
தாளந்தை புதைக்காமல் பயன்படுத்துவோன் உத்தமன்-2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் – 2

தேற்றிடும் தேவ ஆவியே
நிரப்பிடும் நல்ல ஆவியே
ஊற்றும் என்னில் ஊற்றும்
ஊற்றிடும் தேவ ஆவியே

1. பரிசுத்த ஆவியினால்
பரிசுத்தமாக்கிடுமே
ஜெயங்கொண்டு சாத்தான் தலைமிதிக்க
வான்புறாவே வாருமே – 2

2. அக்கினி அபிஷேகத்தால்
அனல் கொண்டு எழும்ப செய்யும்
சுட்டெரிப்பின் ஆவியினால்
சுபாவங்கள் மாற்றிடுமே – 2

3. வல்லமையின் அபிஷேகத்தால்
வரங்கள் ஈந்திடுமே
நோய்களையும் எல்லா பேய்களையும்
துரத்திட வாருமையா – 2

4. ஆனந்த அபிஷேகத்தால்
துயரங்கள் மறக்கச் செய்யும்
மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும்
மன்னவனை துதிக்கச் செய்யும் – 2

5. மன்றாட்டின் அபிஷேகத்தால்
மனதினை உடைத்திடுமே
தேசத்திற்காய் அழியும் ஆன்மாவிற்காய்
மன்றாட என்னில் வாருமே -2

துதி கீதம் பாடி தூயோனை போற்றி
இறைவா உம் நாமம் புகழ்வேன்
என்றென்றும் வாழும் என் இயேசு ராஜா
உம் திருவடி தொழுதிடுவேன்

யேகோவா ஷம்மா – உமக்கே ஸ்தோத்திரம்
யேகோவா ஷாலோம் – உமக்கே ஸ்தோத்திரம்
யேகோவா ரூவா – உமக்கே ஸ்தோத்திரம்
யேகோவா ராஃப்பா

1. சந்திர சூரியன் உம் மகிமை சொல்லுதே
நட்சத்திர கூட்டங்கள் உம் புகழ் பாடுதே
விண்ணக தூதர் உம் புகழ் பாட
மண்ணவர் எம் துதி ஏற்றிடும் தேவா

2. வானத்து பறவைகள் வாழ்த்தி பாடிடுதே
கானக புஷ்பங்கள் கானம் பாடிடுதே
தகைவிலான் குருவியின் தங்குமிடமே
அடைக்கலான் குருவியின் அடைக்கலம் நீரே

3. தேவதாரு விருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு
ஆழ்கடலின் ஆழத்தில் திமிங்கிலங்கள் விளையாடும்
சாரோனின் ரோஜா சமாதான பிரபு
ஜீவன் தந்த ஜீவ விருட்சமே

உம் சமூகம் என் முன்சென்றால்
என் கலக்கமெல்லாம் நீங்குதைய்யா
உம் பிரசன்னம் ஆட்கொண்டால்
என் பயங்கள் எல்லாம் மறையுதைய்யா – இயேசைய்யா

1 . நித்திய வாசியும் பரிசுத்த தேவனும்
மகத்துவமுள்ள உன்னதராம்
நொறுங்குண்டு பணிந்த ஆவியாம் என்னை
உயிர்ப்பித்து அங்கே வாழ்பவராம்

2. பறந்து காக்கும் பட்சியைப்போல
கர்த்தர் எனக்கு ஆதரவாம்
கைவிடப்பட்ட அனாதை எனக்கு
தேவ சேனை உறவினராம்

3. உந்தன் வசனம் சுமக்கும் என்னை
தீயோர் கரங்களில் விடமாட்டீர்
உறுதியாய் உம்மை பற்றிக் கொண்டேன்
அன்பரின் சமாதானம் தந்துவிட்டீர்

4. கொடூரமானோர் சீறல் மதிலை
மோதியடிக்கும் பெருவெள்ளமாம்
நீர் ஏழைக்குப் பெலனும் எளியோருக்கு திடனும்
வெயிலுக்கு ஒதுங்கும் அடைக்கலமாம்

உமக்கு பயந்து
வேதத்தைக் கைக்கொள்ளும்
அனைவருக்கும் நான் தோழன் ஐயா

1. மாயைப் பாரா கண்களைத் தாரும்
உம் வழிகளில் என்னை உயிர்ப்பியும் தேவா

2. வழி தப்பி நடந்தேன் பாவம் செய்தேன்
உபத்திரவத்தின் பின் உம் வேதத்தை காத்தேன்

3. வீண் சிந்தனைகள் அகல வேண்டும்
வேதத்தில் என் தியானம் வேண்டும்

4. வேதத்தைக் காவா மனிதரைக் கண்டேன்
கதறி கண்ணீர் வடிக்கின்றேன் தேவா

உம்மாலே சேனைக்குள்ளே
பாய்ந்து சென்றிடுவேன்
உம்மாலே கோட்டைகளை
தகர்த்து ஜெயித்திடுவேன்

இயேசு ராஜா முன் செல்கிறார்
பயமில்லை கலக்கமில்லை -2

1. கோலியாத்தின் முன் நிற்க கட்டளை தந்தார்
அபிஷேகத்தால் என்னை நிரப்பி வைத்தார்
ராஜாவால் முடியாத செயல்களெல்லாம்
சிறியவன் கரங்களால் செய்து முடித்தார்

2. தேவன் செய்த அதிசயங்கள் நினைக்கச் செய்தார்
விசுவாச பாதையில் உறுதி தந்தார்
வெற்றியை முன்னதாக சொல்ல வைத்தார்
ஜெயம்பெற கரங்களில் பெலனும் தந்தார்

3. மலைபோல் கஷ்டங்கள் முன்நின்றாலும்
உன் முன்னே செல்லும் இயேசுவைப் பார்
விசுவாச பார்வையால் தகர்த்திடுவாய்
தேவனுக்குள் நின்று நீ ஜெயம் பெறுவாய்

4. மான்களின் கால்களை போலாக்கினார்
உயர் ஸ்தலங்களில் என்னை உலாவச் செய்தார்
யுத்தத்திற்கு பெலத்தால் இடைக்கட்டினார்
வெற்றிக் கொடி என்னுடைய கைகளில் தந்தார்

உனக்கெதிராய் உருவாகும் ஆயுதம் எல்லாம்
ஒருபோதும் வாய்க்காமல் போகும் மகனே
கலங்கிடாதே திகைத்திடாதே
பாதுகாக்கும் கர்த்தர் உந்தன் முன்செல்கிறார்

1. நீதியினால் ஸ்திரப்படுவாய் கொடுமை அணுகாது
பயமில்லாமல் படுத்துக் கொள்வாய் திகில் அணுகாது
கர்த்தர் பார்வையில் நீ பிரியமானவன்
காலம் வரும் கர்த்தர் உன்னை மேன்மைப்படுத்துவார்

2. முட்செடிக்குப் பதிலாக தேவதாருவும்
காஞ்சொறிக்கு பதிலாக மிருதுச் செடியும்
ஆசீர்வாதமும் ஆனந்தமும்
ஆண்டவர் என்றென்றும் தந்து மகிழ்வார்

3. மலைகளின்மேல் ஏறிச்சென்று மரங்களை வெட்டி
மகிமையான ஆலயத்தைக் கட்டிடுங்கள்
கேதுரு மரமும் தேவதாருவும்
ஒலிவமரமும் சந்தனமும் இணைத்து கட்டிடுங்கள்

4. கழுகு குஞ்சை சிறகின்மேல் சுமந்து செல்வதுபோல்
காலமெல்லாம் என் தோளில் சுமந்து செல்வேனே
என் ஜனமே என் பங்கே கண்டுபிடித்தேன்
கண்மணிபோல் காத்துக் கொள்வேன் நான்

5. விசுவாச கேடயம் ஏந்தி போராடிடு
ஜெயம் கொண்டு இரும்பு கோலால் அரசாண்டிடு
யெகோவா நிசி உந்தன் பக்கமே
கிறிஸ்துவுக்குள் என்றென்றும் வெற்றி நிச்சயம்

உனக்கு எதிராய் உருவாகும்
ஆயுதங்கள் வாய்க்காதே போகும்

1.ஒரு வழியாய் எதிர்படுவோர்
ஏழு வழியாய் ஓடிப்போவார்
கர்த்தர் உந்தன் முன் செல்லுவார்
கலக்கம் ஏனோ என் மனமே – 2

2. போகும் பாதை நெடுகிலுமே
நெய்யாய் பொழிய செய்திடுவார்
நன்மை கிருபை தொடரச் செய்வார்
நினைவில் நடுக்கம் ஏன் மனமே – 2

3. வாழ்வே இருண்டு போனாலும்
வழி தெரியாமல் திகைத்தாலும்
கர்த்தர் உந்தன் வெளிச்சமாவார்
கலக்கம் ஏனோ என் மனமே – 2

உண்மை தெய்வம் இயேசு ராஜா
உமக்காய் ஏங்கித் தவிக்கிறேன் நேசா

1. காலை வேளையிலே தேடுதே நெஞ்சம்
கர்த்தா உம்மை நாடுதே இதயம்
நேசமே நேசமே என் இயேசு ராஜனே – உண்மை

2. அந்தி சந்தி மத்தியான வேளையில்
நீர் சொன்ன வசனங்கள் தியானித்து மகிழ்கிறேன்
ஏக்கமே ஏக்கமே என் இதய ஏக்கமே – உண்மை

உன்னதமானவர் மறைவிலே
தங்கியிருக்கும் மகனே நீ பாக்கியவான்
சர்வ வல்லவரின் நிழலையே
சார்ந்திருக்கும் மகனே நீ பாக்கியவான்
பாக்கியவான் பாக்கியவான் -2

1. வேடனுடைய கண்ணிக்கு தப்பச் செய்வார்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் விடுதலை கொடுப்பார்
சிறகுகளால் உன்னை மூடி காத்துக்கொள்வார்
செட்டைகளின் மறைவிலேயே அடைக்கலம் புகுவாய்-2

2. வழிகளெல்லாம் உன்னை காக்க தூதர்கள் உண்டு
பாதம் கல்லில் இடறாமல் ஏந்திச் செல்வார்கள்
சிங்கத்தின்மேல் பாம்பின்மேல் நடந்து செல்வாய்
சிங்கத்தையும் சர்ப்பத்தையும் மிதித்து போடுவாய் – பால

3. ஆயிரமாம் பதினாயிரம் அருகில் விழுந்தாலும்
தீமை உன்னை ஒருபோதும் அணுகிடாது
அடைக்கலமாம் உன்னதரை சார்ந்து கொண்டால்
பொல்லாப்பு வாதை உன்னை என்றும் அணுகாது – உன்

4. உன்னதரை கூப்பிடுவாய் பதில் அளித்திடுவார்
ஆபத்தில் உடனிருந்து தப்புவித்திடுவார்
நீடித்த நாட்களாலே திருப்தியாக்கிடுவார்
கர்த்தருடைய இரட்சிப்பை கண்களால் காண்பாய் – உன்

உன்னதத்தின் ஆவி என்மேல் ஊற்றப்படட்டுமே
வனாந்திர வாழ்வு செழிப்பாய் மாற்றப்படட்டுமே

ஊற்றும் (3) ஐயா அபிஷேகத்தை
நிரப்பும் (3) ஐயா வல்லமையாலே

1. கடைசி காலத்திலே கர்த்தர் பாதத்திலே
கதறி ஜெபிக்க வல்ல ஆவி ஊற்றிடும் தேவா

2. பெலவீனத்தில் உதவி செய்பவரே
ஏற்றபடி வேண்டுதல் செய்ய இறங்கி வாருமே

3. அற்புதம் செய்ய அடிமைத்தனம் மாறா
வல்ல ஆவியே வாருமைய்யா வாழ்வை மாற்றிட

4. சிம்சோன்போல கிதியோன்போல
உமக்காய் எழுந்து உலகை மாற்ற விரைந்து வாருமே

உன்னதர் மறைவிடம் எனக்கு புகலிடம்
சர்வ வல்லவர் நிழல்தானே
நான் என்றும் தங்குமிடம்
அல்லேலூயா – 8

1. அடைக்கலம் கோட்டை என்று சொல்லுவேன்
நம்பியுள்ளவர் என்று பறைசாற்றுவேன் – 2
என் தேவன் என்று முழங்கிடுவேன் -2
இரட்சித்து என்னை என்றும் காப்பாற்றுவார் -2
     பயப்படமாட்டேனே -4

2 வேடனின் கண்ணிக்குத் தப்பச் செய்வார்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் விடுவிப்பார் – 2
சிறகுகளால் என்னை மூடிடுவார்
செட்டைகளின் கீழே அடைக்கலமே -2
     பயப்படமாட்டேனே – 4

3. இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும் – 2
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் -2
மதியத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் -2
     பயப்படமாட்டேனே – 4

4. என் அருகில் ஆயிரம் விழுந்தாலும்
வலப்பக்கம் பதினாயிரம் விழுந்தாலும் -2
எதுவும் என்னை அணுகாது -2
என் கண்களால் மாத்திரம் கண்டிடுவேன் -2
     பயப்படமாட்டேனே – 4

5. சிங்கத்தின்மேலும் பாம்பின்மேலும்
நடந்து சென்றிடச் செய்திடுவார் – 2
சாத்தானின் சேனையை முறியடிக்க -2
கால்களில் வலிமை தந்திடுவார் -2
     பயப்படமாட்டேனே – 4

உற்சாகமாய் ஆடி பாடுவேன்
உன்னதரைப் போற்றி துதிப்பேன்
அன்பர் இயேசு என் இன்பமானார்
என்றென்றும் ஆர்ப்பரிப்பேன் – உற்சாகமாய்

1. ஆபத்து வேளைகளில் தப்புவிப்பார்
நீடித்த நாட்களாலே திருப்தியாக்குவார்

2. சிறகுகளால் என்னை மூடி காத்துக் கொள்வார்
கொள்ளை நோய்கள் அண்டாமல் தடுத்து நிறுத்துவார்

3. நன்மையினால் என் வாயைத் திருப்தியாக்குவார்
கழுகுபோல வால வயதை திரும்பத் தருவார்

4. எல்லாவித பயங்களையும் அகற்றிவிட்டார்
என்றென்றும் சமாதானம் தந்துவிட்டார்

5. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தந்தார்
துயரத்திற்கு பதிலாக ஆனந்தம் தந்தார்

6. வெள்ளம்போல சத்துரு வந்தால் பயப்படமாட்டேன்
ஆவியின் துணையோடு அடித்து துரத்திடுவேன்

வல்ல பெரும் ஆவியே
வாரும் எங்கள் மீதிலே – 2
வல்லமையால் நிரப்பிடுமே
வரங்களைத் தந்திடுமே

                  ஆ… அல்லேலூயா (4)

1. சோர்ந்து போன உள்ளங்களை தேற்றிடவே வாருமே
ஒருமனமாய் ஆராதிக்க ஒற்றுமையை தாருமே!

2. தாகமுள்ள ஆத்துமாவின் தண்ணீர் தடாகமே
நீர் அருகின் மரம்போல செழித்திடச் செய்யுமே!

3. வானங்களைத் திறந்தே வல்ல தேவா வாருமே
உலர்ந்திட்ட எலும்புகள் உயிர்பெறச் செய்யுமே!

4. என் சொந்த தேசம் எழுப்புதல் காண
பரலோகம் திறந்தே பரமனே வாருமே!

5. அக்கினியை போடவந்தேன் என்று சொன்ன தெய்வமே
அக்கினியால் அனுதினமும் பற்றி எரிய செய்யுமே!

எங்கு ஓடுவேன் யாரை நம்புவேன்
உம்மையல்லாமல் புகலிடமே
எங்கும் இல்லையையா

1. மாயை மாயை எல்லாம் மாயை
அழகும் மாயை அந்தஸ்தும் மாயை
வாழ்வும் மாயை வளமும் மாயை
விண்ணகமே அது நித்தியமே – எங்கு ஓடுவேன்

2. என் நினைவுகளின் தோற்றமெல்லாம்
நித்தமும் அது பொல்லாததே
உம் நினைவால் நிரப்பிடுமே
அபிஷேகத்தால் அதைக் காத்திடுமே -எங்கு ஒடுவேன்

3. தூக்கியெறிந்த மண்பானை போல்
துவண்டு போனேன் நான் நொறுங்கிப் போனேன்
தேடி வந்தீர் உருவாக்கினீர்
பாதுகாத்து என்னை பயன்படுத்தும் -எங்கு ஒடுவேன்

4. வாழ்வின் போராட்டம் வாட்டுதையா
வழி தெரியாமல் வாடுகிறேன்
நானே வழி சத்தியம் ஜீவன்
என்றுரைத்தீர் வழிகாட்டிடுமே – எங்கு ஓடுவேன்

 

இயேசுதான் வழி என்று பாடிடு பாடிடு
சத்தியம் ஜீவனும் இயேசுதான் என்றிடு 

அல்லேலூயா

1. பேரலைகளும் குரல் கேட்டு அடங்கும்
புயல் காற்றுகள் அதட்டிட அமரும்
அந்தகார ஆவிகளும் நடுங்க
இயேசு வல்லவர் என்று நீ முழங்கு

2. எல்லா நோய்களும் அவர் தொட்டால் சுகம்தான்
எல்லா பேய்களும் அவர் முன்னே நடுங்கும்
வானோர் பூதலத்தோர் முழங்கால் முடங்க
இயேசு வல்லவர் என்று நீ பாடு

3. இரட்சிப்பின் கேடகம் தந்தார்
புது பெலத்தாலே என்னையும் நிறைத்தார்
சத்ருவை பின் தொடர்ந்து பிடிப்பேன்
நிர்மூலமாக்கி நான் ஜெயிப்பேன்

4. மலைகளும் விலகினால் என்ன?
பெரும் பர்வதம் அகன்றாலும் என்ன?
மாறாத தேவனின் உன்னத கிருபை
என்றென்றும் மாறாது மகனே

இயேசுவே தெய்வமே
வாழ்க உம் நாமமே – அல்லேலூயா!

1 துதிகளின் மத்தியில் வாசம் பண்ணும்
தூய தேவா நீர் என்றும் பரிசுத்தர்
விண்ணோர் மண்ணோர் முழங்கால் யாவும் முழங்கும்
வல்ல நாமம் இயேக என்று முழங்கிடுவேன்

2. தூதர் சேனை உம் பாதம் பணிந்திட
பூமியின் ராஜாக்கள் நடுங்கிட
வெண்மேகம் மீது நியாயம் தீர்க்க வந்திடும்
வல்ல ராஜா இயேசு என்று முழங்கிடுவோம்

3. கிருபையும் நன்மையானவர்
வழிமே! சத்தியமே! ஜீவனே!
வாழ்வளிக்கும் ஒளிச்சுடரே! இயேசுவே!
உம் நல்ல நாமம் வாழ்கவே! வளர்கவே!

இயேசுவே என் ராஜனே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
ஏற்றுக் கொள்ளுமே ஏந்திக் கொள்ளுமே
காத்துக் கொள்ளுமே என்னை வழிநடத்துமே

1. இஸ்ரவேலின் தேவனின் செட்டை மறைவிலே
நிறைவான அடைக்கலம் எனக்கு உண்டு

2. அழுக்கான கந்தையாய் வந்து நிற்கிறேன்
அழகான ஆடை தந்து ஆசீர்வதியுமே

3. துரத்தப்பட்ட வெளிமான் போல் தனித்து நிற்கிறேன்
கன்மலையின் வெடிப்பில் வைத்துக் காத்துக் கொள்ளுமே

4. உறுதியான இடத்தில் என்னை ஸ்திரப்படுத்துமே
தகப்பன் வீட்டு மகிமையினால் திருப்தியாக்குமே

5. கையிட்டுச் செய்யும் வேலையை ஆசீர்வதிக்கவே
வானத்து பொக்கிஷ சாலையை திறந்து வையுமே

எதனால் நான் விசேஷித்தவன் -(2)
நீர் என்னோடே வருவதனால் அல்லவா!

1. உம் சமூகம் என்முன்னே கடந்து சென்றால்
சீறிவரும் செங்கடலிலும் வழி அமையும்

2. உம் சமூகம் என்முன்னே கடந்து சென்றால்
மாராவின் கசப்பும் மதுரமாகும்

3. ஆடுகளின் பின்சென்ற தாவீதையும்
அரசனாய் மாற்றியது உம் கரமல்லவா!

4. உம் சமூகம் என்முன்னே கடந்து சென்றால்
சிறைவாழ்வும் சீர்வாழ்வாய் மாறிவிடும்

5. உம் சமூகம் என்முன்னே கடந்து சென்றால்
பாடுகளில் ஆறுதல் பெருகிடுமே!

6. உம் சமூகம் என்முன்னே கடந்து சென்றால்
நொறுங்குண்ட என் இதயம் தேற்றப்படும்

7. உம் சமூகம் என்முன்னே கடந்து சென்றால்
பரலோக பாதையில் பயணம் செய்வேன்

Change Language »